For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரி கவர்னரிடம் ராஜ்பவனில் வைத்து அமலாக்கப் பிரிவு விசாரணை

By Chakra
Google Oneindia Tamil News

Iqbal Singh and Hasan Ali
டெல்லி: பல லட்சம் கோடி ஹவாலா மோசடியில் கைதாகி சிறையில் உள்ள அசன் அலி கானுக்கு பாஸ்போர்ட் பெற்றுத் தந்த விவகாரத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கிடம் அமலாக்கப் பிரிவினர் இன்று விசாரணை நடத்தினர்.

டெல்லியிலிருந்து வந்த 4 பேர் கொண்ட குழு புதுச்சேரி ராஜ்பவனில் வைத்து அவரிடம் இன்று விசாரணை நடத்தியது.

முன்னதாக இக்பாலிடம் விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவினருக்கு நேற்று பிரதமர் மன்மோகன் சிங் அனுமதி அளித்தார்.

வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதுடன், ரூ.75,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புனே குதிரை பண்ணை அதிபர் அசன் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

1997ம் ஆண்டில் அலி பாஸ்போர்ட் பெற பரிந்துரை செய்ததாக புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
After getting Prime Minister's nod to question Puducherry Lt Governor Iqbal Singh, the Enforcement Directorate officials today quizzed him at Pondy Rajbhavan about money launderer Hasan Ali Khan's links with him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X