For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-16

By Chakra
Google Oneindia Tamil News

PSLV
சென்னை: பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் இன்று காலை 10.12 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் ரிசோர்ஸ்சாட்-2, யூத்சாட், எக்ஸ்-சாட் ஆகிய 3 செயற்கைக்கோள்களை அடுத்தடுத்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இவை பூமியிலிருந்து 822 கி.மீ உயரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டன.

இதில் ரிசோர்ஸ்சாட்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) தயாரித்துள்ளது. 1,206 கிலோ எடை உள்ள இந்த செயற்கைக் கோள் தொலை உணர்வு திறனில் (remote sensing) அதி நவீன வசதிகளைக் கொண்டது. இதன் மூலம் நாட்டின் இயற்கை வளங்களை கண்காணிக்க முடியும்.

யூத்சாட் செயற்கைக்கோள் இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பு ஆகும். இதன் எடை 92 கிலோ. விண்மீன்கள் மற்றும் காற்றுமண்டல ஆய்வுக்கு இது பயன்படும்.

எக்ஸ்-சாட் செயற்கைக்கோள் 106 கிலோ எடை உள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நான்யங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இதைத் தயாரித்துள்ளது.

கடைசியாக இஸ்ரோ செலுத்திய 3 ராக்கெட்களில் 2 தோல்வியடைந்துவிட்ட நிலையில் இன்றைய ராக்கெட் ஏவுதல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.

இந்த ஆண்டில் இஸ்ரோ ஏவிய முதல் ராக்கெட் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The PSLV-C 16, which is scheduled to lift off from the Satish Dhawan Space Centre in Sriharikota at 10:12 am on Wednesday, could be just what is needed to put smiles on the faces of scientists at ISRO. Coming four months after the failed launch of the GSLV-F06, the ISRO’s highly successful launch vehicle, the PSLV, will be put to test once again, this time to place three satellites into orbit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X