For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ திருமணத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைக்கப்படவில்லை

By Siva
Google Oneindia Tamil News

Obama
லண்டன்: இளவரசர் வில்லியம், கேட் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல், இருக்கை ஏற்பாடுகள் குறி்த்த விவரத்தை இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் நேற்று வெளியிட்டனர். இதில் அமெரி்கக அதிபர் ஒபாமா பெயர் இல்லை.

இளவரர் வில்லியம், கேட் மிடில்டன்னை வரும் 29-ம் தேதி மணக்கிறார். இந்த ராஜ திருமணத்திற்கு சுமார் ஆயிரத்து 900 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் கடந்த வாரமே ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அதில் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், அவரது மனைவி விக்டோரியா, இசையமைப்பாளர் எல்டன் ஜான், இயக்குனர் கை ரிட்சி, பாடகர் ஜோஸ் ஸ்டோன், மிஸ்டர் பீன் நடிகர் ரோவன் அட்கின்சன் ஆகியோர் பெயர் அடக்கம்.

பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீபா இந்த திருமணத்தில் கலந்து கொள்கிறார் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

டென்மார்க், நார்வே, ஸ்பெயின், தாய்லாந்து, மொராக்கோ நாடுகளைச் சேர்ந்த 40 ராஜ குடும்பத்தினர் வில்லியம் திருமணத்தில் கலந்து கொள்கின்றனர். மேலும், இங்கிலாந்து அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், ஆப்கானிஸ்தானில் போராடிய இங்கிலாந்து வீரர்கள் மற்றும் வில்லியமின் அறக்கட்டளைகளில் பணிபுரிவோர்களும் கலந்து கொள்கின்றனர்.

ராஜ திருமணங்களுக்கு வழக்கமாக அந்நாட்டை ஆளும் ராஜ குடும்பத்தினர் தான் அழைக்கப்படுவர். காமன்வெல்த் நாடுகள் அல்லாத நாடுகளின் அரசியல் தலைவர்கள் அழைக்கப்படுவதில்லை. அதனால் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் சார்கோசி ஆகியோர் அழைக்கப்படவில்லை என்று அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
US president Barack Obama hasn't been invited to the royal wedding. Palace officials has told that they won't invite political heads of countries other than the 54 members of the commonwealth nations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X