For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடுவானில் இத்தாலி விமானத்தை கடத்த முயன்ற கஜாகஸ்தான் நபர் கைது

By Chakra
Google Oneindia Tamil News

ரோம்: இத்தாலியின் அலிடாலியா நிறுவன விமானம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து ரோம் நகர் நோக்கி பறந்து கொண்டிருந்தது. அப்போது ஆண் பயணி ஒருவர் பலமாக சிறித்தபடி திடீரென எழுந்தார்.

சிறிய கத்தியை விமானப் பணிப்பெண்ணின் கழுத்தில் வைத்து, விமானத்தை லிபிய நாட்டுத் தலைநகர் திரிபோலிக்கு திருப்புமாறு மிரட்டினார்.

இதையடுத்து சில விமான பயணிகள் அந்த நபர் மீது பாய்ந்து அவரை அமுக்கிப் பிடித்தனர். இது குறித்து ரோம் நகர போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.விமானம் தரை இறக்கியவுடன் விமானத்துக்குள் நுழைந்த அதிரடிப்படையினர் அவரை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் கஜகஸ்தானை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. 48 வயதான அவர் பாரீசில் வேலை பார்த்து வருகிறார்.

கத்தி முனையில் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த விமான பணிப் பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

English summary
A man with a knife tried to hijack an Alitalia flight from Paris to Rome Sunday night, demanding it be flown to Libya, but was quickly overpowered and arrested when the plane landed, officials and witnesses said. Witnesses said the man put a small knife to the throat of a female flight attendant and held her for a few minutes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X