For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அல்கொய்தா ஆள் தேர்வு நடக்கும் மசூதிகள் பட்டியல் தயாரித்துள்ள பென்டகன்

By Siva
Google Oneindia Tamil News

மான்ட்ரியல்: அல்கொய்தா தனது இயக்கத்திற்கு பயங்கரவாதிகளைத் தேர்வு செய்யும் மசூதிகளை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தயாரித்துள்ளதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தானினின் சில பகுதிகளில் வலுவாக உள்ள பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா பல நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. கனடாவின் மான்ட்ரியல் முதல் பாகிஸ்தானின் கராச்சி நகர் வரை உள்ள மசூதிகள், இஸ்லாமிய மையங்களில் வைத்து அல்கொய்தாவுக்கு ஆள் எடுக்கின்றது. இந்த இடங்களின் பட்டியலை பென்டகன் தயாரித்துள்ளது.

இந்த பட்டியலில் கியூபாவில் உள்ள குவாண்டானமோ வளைகுடா, மான்ட்ரியலில் உள்ள அல்-சுனா மசூதி, கராச்சியில் உள்ள அபு பகிர் சர்வதேச பல்கலைக்கழகம், யேமனில் உள்ள திமஜ் மையம், வடக்கு லண்டனில் உள்ள பின்ஸ்பரி பூங்கா மசூதி, இத்தாலியின் மிலன் நகரில் உள்ள மசூதி, பிரான்ஸின் லியோன் நகரில் உள்ள லினெக் மையம், காபூலில் உள்ள வாஸிர் அக்பர் கான் மசூதி ஆகியவற்றில் அல்கொய்தாவுக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இது குறித்து பிரான்ஸில் உள்ள லெனக் மைய காப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

எங்கள் மையத்தில் அல்கொய்தாவுக்கு ஆள் சேர்ப்பு நடக்கவில்லை. சிறந்த நன்னடத்தைக்குப் பெயர்போனது எங்கள் மையம். அப்படி இருக்கையில் ஏதாவது முட்டாள்தனமான செய்வோமா? இது குறித்து அமெரிக்காவுக்கான பிரான்ஸ் தூதரிடம் நாங்கள் கண்டனம் தெரிவித்தோம். மசூதியின் பெயரைக் கெடுக்கவே இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றார்.

இதற்கிடையே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள மற்றொரு தகவலில், அமெரிக்க கடற்படை தளத்தில் உள்ள சிறைச்சாலையில் மொரீஷியஸைச் சேர்ந்த முகமது ஔத் சலாஹி என்பவர் 1999-2000-ம் ஆண்டில் மான்ட்ரியல் மசூதியில் பணியாற்றியதாக கூறப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பயிற்சி பெற்ற சலாஹி, அடிப்படையில் மின்னியல் பொறியாளர். அவர் ஆப்கானிஸ்தானுக்கு சென்று ஒசாமா பின் லேடனை சந்தித்துள்ளார்.

பின்னர் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தேர்வு செய்யப்பட்ட 4 பேரில் சலாஜியும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. 2000-வது ஆண்டில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைத் தகர்க்க சதித் திட்டம் தீட்டியவர் என்ற குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
Pentagon has prepared a list of mosques and islamic centres where Al-Qaeda recruits people for its movement. Wikileaks has released this piece of information.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X