For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 3 கோடி பரிசுத் தொகையை வழங்கினார் கருணாநிதி

Google Oneindia Tamil News

karunanidhi
சென்னை: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 3 கோடி பரிசை இன்று முதல்வர் கருணாநிதி வழங்கினார். கேப்டன் டோணி, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் இதைப் பெற்றுக் கொண்டனர்.

இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பரிசுத் தொகையை அறிவித்தன.

அதன்படி தமிழக அரசும் இந்திய அணிக்கு ரூ. 3 கோடியும், தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ. 1 கோடியும் பரிசாக அளிப்பதாக அறிவித்தது.

இந்த நிலையில் இந்த பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.

இந்திய கேப்டன் டோணி, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன், சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது இந்திய அணிக்கான பரிசுத் தொகைக்கான காசோலையை டோணி மற்றும் சீனிவாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்திய அணியினருக்கு தலா ரூ. 21.42 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.

அதேபோல ரூ. 1 கோடிக்கான காசோலையை அஸ்வின் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

English summary
CM Karunanidhi presented Rs. 3 cr cash gift to the WC winning Indian team today. Captain Dhoni and BCCI secretary Srinivasan recieved the gift from the CM. Indian spinner from TN R. Ashwin was given Rs. 1 cr as gift.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X