For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புல்லட் பாய்ந்ததால் பிளந்து போன பின்லேடன் தலை!

Google Oneindia Tamil News

Osama Bin Laden
வாஷிங்டன்: எந்தவித ஆயுதமும் கையில் இல்லாத நிலையில், அமெரிக்க வீரர்களிடமிருந்து அதி வேகமாக பாய்ந்து வந்த குண்டுகள் நெற்றிப் பொட்டிலும், மார்பிலும் பாய்ந்ததால் சுருண்டு விழுந்து இறந்துள்ளார் அல்கொய்தா தலைவர் பின்லேடன். தலையில் பாய்ந்த குண்டு பின்லேடனின் தலையின் மேற் பகுதியை அப்படியே பிளந்து விட்டது என்று அமெரிக்க மீடியாக்கள் கூறுகின்றன.

தலையில் குண்டு பாய்ந்ததில், பின்லேடனின் மண்டை ஓடு பிளந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பார்க்கவே படு கோரமாக இருப்பதால்தான் இந்தப் படத்தை வெளியிட அமெரிக்கா தயங்குவதாக கூறப்படுகிறது. இப்படத்தை வெளியிட்டால், உலகம் முழுவதும் பின்லேடன் மீது பச்சாதாப உணர்வு வந்து விடுமோ என்று அமெரிக்கா பயப்படுகிறது.

பின்லேடன் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்க செனட் சபையின் புலனாய்வுப் பிரிவு தலைவரான டியான் பெய்ன்ஸ்டீன் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்,

கிட்டத்தட்ட 38 நிமிடங்களுக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. மேல் மாடி வழியாக உள்ளே புகுந்த அமெரிக்க சீல் படையினர், மேல் மாடியில் இருந்த பின்லேடனைப் பார்த்ததும் அவரை பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது பின்லேடனிடம் ஆயுதம் எதுவும் இல்லை. ஆனால் அவருக்குப் பக்கத்தில் ஆயுதங்கள் இருந்துள்ளன.

அதை அவர் எடுக்க எத்தனிப்பதற்குள் அமெரிக்கப் படையினர் அதி வேகமாக சுட்டுள்ளனர். ஒரு குண்டு அவரது நெற்றிப் பொட்டில் பட்டு தலையை துளைத்துச் சென்றது. இதில் கபாலம் பிளந்துவிட்டது. இன்னொரு குண்டு நெஞ்சில் பாய்ந்தது. அதி வேகமாக நடந்த இந்த தாக்குதலால் பின்லேடன் உடனடியாக மாண்டு போனார் என்றார்.

இன்னொரு அதிகாரி கூறுகையில், பின்லேடன் சரணடைய மறுப்பது போல நடந்து கொண்டதாலும், ஆயுதத்தை எடுக்க எத்தனிப்பது போல நகர்ந்ததாலும் அவரை அமெரிக்கப் படையினர் சுட்டு வீழ்த்தினர் என்றார்.

பின்லேடன் உடல் மற்றும் அவரது தலை ஆகியவை அடங்கிய புகைப்படங்களைப் பார்த்த ஒரு அமெரிக்க அதிகாரி கூறுகையில், பின்லேடனின் இடது கண்ணுக்கு மேலே குண்டு பாய்ந்துள்ளது. அதி வேகமாக பாய்ந்ததால் தலையின் மேற் பகுதி அப்படியே பிளந்து போய் விட்டது. இன்னொரு குண்டு நெஞ்சில் பாய்ந்துள்ளது என்றார்.

பையில் இருந்த யூரோ பணம்:

பின்லேடனைக் கொன்ற பின்னர் உடலைக் கைப்பற்றிக் கொண்டு ஆப்கானிஸ்தானுக்கு விரைந்த அமெரிக்கப் படையினர் பின்லேடன் வீட்டிலிருந்த பல பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

10 ஹார்ட் டிரைவ்ககள், ஐந்து கம்ப்யூட்டர்கள், 100க்கும் மேற்பட்ட சிடி, டிவிடிக்கள் ஆகியவை இதில் அடக்கம். மேலும் பின்லேடனின் சட்டைப் பையில் 500 யூரோ பணம் இருந்ததாகவும், சில தொலைபேசி எண்கள் இருந்ததாகவும் தெரிகிறது.

ஐந்து செல்போன்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள், ஏ.கே.47 உள்ளிட்ட ஐந்து துப்பாக்கிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏதாவது ஆபத்து நேரிட்டால் உடனடியாக தப்பிப் போகும் அளவுக்கு பல்வேறு முன்னேற்பாடுகளுடன் பின்லேடன் இருந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அமெரிக்கப் படையினரின் மின்னல் வேகத் தாக்குதலிலிருந்து அவனால் தப்ப முடியாமல் போய் விட்டது.

English summary
A US commando team that fought its way upstairs at Osama bin Laden's compound killed the unarmed Al Qaeda leader with rapid-fire shots to his chest and forehead, US media reports said citing officials. Bin Laden, who the White House said put up some form of resistance, was moving when he was first shot, Senator Dianne Feinstein, chairwoman of the Senate Intelligence Committee, told CNN. Weapons were near bin Laden, who died on an upper floor of the compound toward the end of the 38-minute raid, she said. "He was right there and going to get those arms. You really can't take a chance." A photo shows a gunshot wound to the head above the left eye, with the skull partially blown away, CNN said citing two sources who have seen a photograph of bin Laden's body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X