For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேவைப்பட்டால் மீண்டும் பாக்.கில் புகுந்து தாக்குதல்-அமெரிக்கா எச்சரிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தேவைப்படுமானால் அபோத்தாபாத்தில் நடந்த தாக்குதலைப் போல மேலும் பல தாக்குதல்களை பாகிஸ்தானில் நடத்துவோம் என்று அமெரிக்கா மிரட்டியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், அபோத்தாபாத்தில் நடந்த தாக்குதல் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. இதுகுறித்து பிறர் விமர்சிப்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. தேவைப்பட்டால் இதேபோல மேலும் பல தாக்குதல்களை பாகிஸ்தானில் நடத்த அமெரிக்கா தயங்காது.

முக்கியத்தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஒளிந்திருந்தால், அவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க முன்வராவிட்டால் இதை செய்ய அமெரிக்க நிர்வாகம் தயங்காது.

போர்ச் சட்டத்தை எந்த வகையிலும் அமெரிக்கா மீறவில்லை. சர்வதேச சட்டத்திர்கு உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெள்ளைத் துணி காட்டி சரணடைய ஒசாமா முன்வந்திருந்தால் நாங்கள் சுட்டிருக்க மாட்டோம். நிச்சயம் உயிருடன் பிடித்திருப்போம். ஆனால் அவர் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் சுட நேரிட்டது.

English summary
The US will again carry out special operations in Pakistan if required like the attack that killed Osama bin-Laden to target high profile terrorists, a top White House official said, asserting this had been "very successful". Notwithstanding the reaction from Pakistan that America's covert operation against bin Laden was an "unauthorized unilateral action", White House Press Secretary Jay Carney said the Obama Administration would continue with this policy if that country does not act against terror suspects holed up in that country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X