For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் ஏழை இளைஞர்

Google Oneindia Tamil News

Shankar
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை இளைஞர் சங்கர் என்பவர் சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்குப் பணமின்றி உதவி நாடி நிற்கிறார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ளது பேரகணி கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் சங்கர் (23) . இவரது தந்தை கடந்த 18 வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டார்.

தற்போது இவரும், இவரது தாய் சித்தியம்மாளும், இவரது மூத்த சகோதரி சுமதி அரவணைப்பில் வசித்து வருகின்றார். இவர் தொலைதொடர்பு கல்வி மூலம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பயின்று வந்துள்ளார்.

இவர் தற்போது கோத்தகிரியில் உள்ள ஒரு மருந்தகத்தில் பணியாற்றி வருகின்றார். இவரது வருமானம் மாதம் ரூ 3,500 மட்டும்.

இதனால், குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக இவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. இந்த நிலையில், சங்கரின் இரண்டு சிறுநீகரங்களும் செயல்படாத நிலைக்குப் போயுள்ளன.

சிகிச்சை பெறுவதற்காக கோவையில் உள்ள கே.ஜி. மருத்துவ மனையில் மருத்துவ சோதனை செய்த போது, சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்ய ரூ 3, 45, 000 செல்வாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வரும் மே 17 ம் தேதி கோவை கே.ஜி. மருத்துவமனையில் சங்கருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் சங்கரால் இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாத நிலை. தனக்கு உதவி செய்யுமாறு உதவி நாடி நிற்கிறார் சங்கர்.

அவரது முகவரி

டி. சங்கர்,
S/o தெந்தை,
எண் - 1/ 26, பேரணி கிராமம்,
மிளித்தேன் அஞ்சல்,
கோத்தகிரி வட்டம்,
நீலகிரி மாவட்டம் - 643 217.

செல் எண்: 84890 00842.

English summary
A poor youth, named Shankar is affected with kidney problem. He has to undergo urgent surgery. For this he needs Rs. 3,45,000. But his poor income and family background make this impossible. Good hearted people can help him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X