For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி வழக்கில் குறுக்கீடு-சஹாரா குழும தலைவருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: 2ஜி வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளை மிரட்டியதாக சஹாரா குழுமத் தலைமை செயல் அதிகாரி சுப்ரதா ராய் மற்றும் சஹாரா குழும பத்திரிக்கையின் இரு நி்ருபர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் தொடர்புடைய ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ராய் ரூ. 150 கோடியை வழங்கியது தொடர்பாகவும், எஸ் டெல் நிறுவனத்தில் ராய் முதலீடு செய்தது தொடர்பாகவும் அவரிடமும் விசாரிக்க அமலாக்கப் பிரிவு விரும்பியது.

இதையடுத்து ராய்க்கு அமலாக்கப் பிரிவு அதிகாரி ராஜேஸ்வர் சிங் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து அவரைப் பற்றி சஹாரா குழும பத்திரி்க்கையில் தவறான செய்திகள் வெளியாயின.

மேலும் சிங்கின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து 25 கேள்விகள் அடங்கிய பட்டியலையும் அனுப்பி பதில் கோரியிருந்தனர் அந்தப் பத்திரிக்கையின் இரு நிருபர்கள்.

இதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு ராய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்திருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஜி.எச்.சி்ங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
The Supreme Court on Friday issued a contempt notice to Sahara Group CEO Subrata Roy and two others for trying to threaten and intimidate an Enforcement Directorate officer who sent a notice to Roy in connection with the 2G scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X