For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளி விலை திடீர் சரிவு: ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.17 ஆயிரம் குறைந்தது!!

By Shankar
Google Oneindia Tamil News

Silver Ring
சென்னை: வெள்ளியின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ 17000 குறைந்துள்ளது.

ஜனவரி (2011) மாதம் 1-ந் தேதி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.49,300 ஆக இருந்தது. அது பிப்ரவரி 1-ந் தேதி ரூ.46,000 ஆக குறைந்தது. பின்னர் மார்ச் 1-ந் தேதி ரூ.55,200 ஆகவும், ஏப்ரல் 1-ந் தேதி ரூ.60,200 ஆகவும் உயர்ந்தது. கடந்த ஏப்ரல் 30-ந் தேதி அதிக பட்சமாக ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.76,600 ஆக இருந்தது.

இந்த திடீர் விலை உயர்வால் வெள்ளி மற்றும் அதைச் சார்ந்துள்ள தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

ஆன்-லைன் வர்த்தகத்தால்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆன்-லைன் வர்த்தகத்தை தடைசெய்ய உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வெள்ளியின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 30-ந் தேதி ரூ.76,000 ஆக இருந்த ஒரு கிலோ வெள்ளியின் விலை, மே 2-ந் தேதி ரூ.72,150 ஆக குறைந்தது. மே 4-ந் தேதி வெள்ளியின் விலை திடீரென வீழ்ச்சி அடைந்து ரூ.67,500-க்கு விற்பனையானது.

நேற்று (5-ந் தேதி) வெள்ளியின் விலை மேலும் குறைந்து, கிலோ ரூ.63,350-க்கு விற்பனையானது.

சேலத்தில் ஒரு கிலோ பார் வெள்ளி நேற்று ரூ.58,000-த்திற்கு விற்பனையானது. இங்குதான் வெள்ளி நகைத் தொழில் அதிகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த ஒரு வாரத்துக்குள் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.17,000 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Silver rate declines Rs 17000 per kg in a week. The selling price of Silver in last week was Rs 76000 per kg. This rate came down to Rs 58000 per kg yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X