For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒசாமா கொல்லப்பட்ட அதிர்ச்சியில் முதல் மாமியார் மரணம்: அரேபிய நாளிதழ் தகவல்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: ஒசாமா பின் லேடன் கொலலப்பட்ட செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் அவரது முதல் மாமியார் மரணம் அடைந்தார்.

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை சுட்டுக் கொன்றன. ஒசாமா சிரிய நாட்டுப் பெண் நஜ்வா கானிம் என்பவரை தனது 17-வது வயதில் லடாக்கியாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். நஜ்வா பின் லேடனை கடந்த 2001-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். நஜ்வா தவிர பின் லேடனுக்கு 5 மனைவிகள்.

நஜ்வாயின் தாயார் நபிக் அல் கானிம் வடக்கு சிரியாவில் வசித்து வந்தார். அவரிடம் பின் லேடன் கொல்லப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவருக்கு அதிரிச்சியில் பக்கவாதம் ஏற்பட்டது.

அவரை லடாக்கியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த தகவல் லண்டனில் இருந்து வெளியாகும் அரேபிய நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary
Osama bin Laden's first mother-in-law Ghanem died of shock on hearing his death. Osama married Najwa Ghanem, at the tender age of 17 in Latakia but she divorced him in 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X