For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒசாமாவை உருவாக்கியது அமெரிக்காதானே-பாக். பிரதமர் கிலானி நக்கல்

Google Oneindia Tamil News

Gilani
இஸ்லாமாபாத்: ஒசாமா பின்லேடன் என்ற பயங்கரவாதியை உருவாக்கி, வளர்த்து ஆளாக்கியதே அமெரிக்காதானே. அதை அந்த நாடு மறந்து விட்டதா என்று அமெரிக்காவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரஸா கிலானி.

இதுகுறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், அல் கொய்தா தலைவரான பின்லேடனின் வளர்ச்சிக்கு யார் காரணம்?. மற்றவர்களின் தவறுக்காக, எங்களது கொள்கைகளை தவறு என்று யாரும் கூற முடியாது.

அல் கொய்தா பிறந்த இடம் பாகிஸ்தான் அல்ல. நாங்கள் பாகிஸ்தானுக்கு வருமாறு பின்லேடனை அழைக்கவில்லை. ஆப்கானிஸ்தானும் அழைக்கவில்லை. அவர் எப்படி இந்தப் பிராந்தியத்திற்கு வந்தார் என்பதை உலகம் அறியும். வரலாறு தெரிவிக்கும்.

உலக அளவிலான உளவுத் தோல்வியே பின்லேடனின் இருப்பிடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம். அதேசமயம், ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவம் ஆகியவை சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்குள் எந்தப் பிரச்சினையும், பூசலும் இல்லை என்றார் கிலானி.

English summary
Exposed by the US action that eliminated Osama bin Laden in the heart of the country, Pakistan Prime Minister Yousuf Raza Gilani today sought to turn the tables on its ally, asking who was was responsible for the rise of al-Qaeda chief. "We cannot be blamed for flawed policies and blunders of others. Pakistan is not the birthplace of al-Qaeda. We did not invite Osama bin Laden to Pakistan or even to Afghanistan," he told the National Assembly, a week after the US operation that killed bin Laden in his safe house in Abbottabad. He blamed "failure" of global intelligence agencies in not locating bin Laden and praised the role of both ISI and the army.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X