For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவில் சந்தன மரங்களை பாதுகாக்க நாய்படை: வனத்துறையினர் அதிரடி

By Siva
Google Oneindia Tamil News

Dog Squad
திருவனந்தபுரம்: கேரளாவில் சந்தன மரங்கள் அதிகமாக உள்ள மரையூர் வனப்பகுதியில் விரைவில் நாய் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

கேரள வனப்பகுதியில் சமீபகாலமாக சந்தன மரங்களை வெட்டிக் கடத்தும் கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் கொள்ளையர்கள் சிக்கவி்ல்லை. உள்வனங்களில் வனத்துறையினர் எளிதாக செல்ல முடியாத இடங்களில் கூட கொள்ளையர்கள் எளிதாக சென்று சந்தன மரங்களை வெட்டி கடத்துகின்றனர்.

சந்தன மரக்கடத்தலை தடுக்க புதிதாக நாய் படையை அமைக்க கேரளா வனத்துறை தீர்மானித்தது. இதற்காக 2 துப்பறியும் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நாய்களுக்கான சிறப்பு பயிற்சி சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து கேரள வனப்பகுதியில் அடுத்த மாதம் முதல் சந்தன மரங்களை பாதுகாக்கும் பணியில் இந்த நாய் படை ஈடுபடுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக சந்தன மரங்கள் அதிகமாக உள்ள இடுக்கி மாவட்டம் மரையூர் வனப்பகுதியில் இந்த நாய் படை பயன்படுத்தப்பட உள்ளது.

English summary
Kerala forest offcials have decided to use dog squad to prevent sandalwood smuggling. Sandalwood smugglers are increasing alarmingly in Kerala and they are untraceable. So, the offcials are going to use dog squad to protect sandalwood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X