For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயாரில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

Google Oneindia Tamil News

Crocodile
கூடலூர்: மாயார் ஆற்றில் முதலைகள் இருப்பதால் அதில் சுற்றுலாப் பயணிகள் யாரும் குளிக்கக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாயார் ஆறு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, கரடி, சிறுத்தை, மான், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் மாயார் ஆறு உள்ளது.வனத்துறைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் யானை சவாரி மூலம் வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லலாம்.

ஆற்றில் முதலைகள்

இதில் சில சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினரின் அறிவுரைகளை மீறி வனத்திற்குள் செல்வதையும், ஆற்றில் குளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது ஆற்றில் நீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், முதலைகள் உலா வருவதை வனத்துறையினரும், கிராம மக்களும், சில சுற்றுலாப் பயணிகளும் கண்டுள்ளனர்.

எச்சரிக்கை

இதனால் ஆற்றுக்குள் இறங்கும் சுற்றுலாப் பயணிகள் முதலையிடம் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தை தவிர்க்க, சுற்றுலாப் பயணிகள் மாயார் ஆற்றுக்கு செல்லக்கூடாது; மீறி ஆற்றுக்கு செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Forest officials have sighted crocodiles in Mayar river. So, they have warned the tourists not to take bath in the river. Severe action will be taken against those who violate the rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X