For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு!

By Shankar
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து அவரை ஆட்சியமைக்குமாறு அழைத்துள்ளார் ஆளுநர்.

இதையடுத்து நாளை பகல் 12.15 மணிக்கு ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்பார் என்று தலைமைச் செயலாளர் மாலதி அறிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சியமைக்கிறது அதிமுக.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. அதில் ஜெயலலிதாவை சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வராக) தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோர, ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ராஜ் பவனில் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது, ஜெயலலிதாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் பர்னாலா.

அவரிடம், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், தன்னை சட்டமன்ற அதிமுக தலைவராக ஏகமனதாக தேர்வு செய்த தீர்மான கடிதத்தைக் கொடுத்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்கு ஆளுநர் அழைப்பு:

இதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக பொறுப்பேற்கவும் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கவும் முறைப்படி அழைப்பு விடுத்தார் ஆளுநர் பர்னாலா.

இதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, நாளை முதல்வராக பதவி ஏற்கிறார். ஜெயலலிதாவுடன் 26 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பர் என்று தெரிகிறது. நாளை பகல் 12.15 மணிக்கு ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்பார் என்று தலைமைச் செயலாளர் மாலதி அறிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அவருக்கும் புதிய அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர்.

English summary
AIADMK supremo Jayalalitha met Tamil Nadu Governor Surjith Singh Barnala for claiming the right to form the new government. After the meet, Barnala invited her to form the govt immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X