For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதவியேற்பு விழாவுக்கு ஜெ. அழைக்கிறாரா என்று பார்ப்போம்-விஜய்காந்த்

By Chakra
Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்கும் விழாவுக்கு செல்வீர்களா? என்று கேட்டதற்கு, அந்த விழாவுக்கு முதலில் எங்களை அழைக்கிறார்களா என்று பார்ப்போம் என பதில் தந்தார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.

தேர்தலில் வென்ற தேமுதிக எம்எல்ஏக்களிடையே பேசிய அவர், இந்த கூட்டத்தில் நான் ஒன்றே ஒன்றைத்தான் சொல்ல ஆசைப்படுகிறேன். அதாவது, எனக்கு கிடைத்த தொண்டர்கள் மாதிரி இந்த உலகத்தில் வேறு யாருக்கும் கிடைத்ததில்லை. தேர்தல் நேரத்தில் எல்லா பூத்துகளிலும் தொண்டர்களைப் பார்த்தேன். அவர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

காசு கொடுத்தாலும் விலை போகாத தொண்டர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தொண்டர்கள் இருக்கும்வரை இந்த விஜயகாந்துக்கு எந்த தோல்வியும் இருக்காது.

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் நாம், நாளை ஆளும் கட்சி தலைவராக வரலாம் என்று இங்கு பேசினார்கள். நாட்டு மக்கள் பிரச்சனையை தீர்ப்பதில்தான் நாம் கவனம் செலுத்தவேண்டும்.

முதல்வராக பதவி ஏற்க உள்ள ஜெயலலிதாவுக்கு, எனது சார்பிலும், நமது கட்சி சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலில் உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஊழலையும், வறுமையும் ஒழிப்பேன். கல்விக்கு முன்னுரிமை, வேலை வாய்ப்பு, சாலை வசதி போன்ற பிரச்சனைகளுக்காக பாடுபடுவேன். ஏழை மக்களுக்காக போராடுவேன்.

நமது எம்.எல்.ஏக்கள் கழுத்தில் துண்டை போட்டுக் கொண்டு மக்கள் பிரச்சனைக்காக பாடுபடாவிட்டால் சும்மா விடமாட்டேன்.

நான் கூட்டங்களில் பேசியதைப் பார்த்து பைத்தியக்காரன் என்று கூறினார்கள். இன்றைக்கு நான் நம்புவது எல்லாம் எனது தொண்டர்களைத்தான். தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் மற்ற எம்.எல்.ஏக்களுக்கு முன்மாதிரி எம்.எல்.ஏக்களாக இருக்கவேண்டும் என்றார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: நீங்கள் எதிர்க்கட்சி தலைவராவீர்களா?

பதில்: அப்படி என்று நீங்கள் சொல்கிறீர்கள், நானும் நம்புகிறேன். இதுதானே உண்மை.

கேள்வி: அ.தி.மு.கவிடம் அமைச்சர் பதவி கேட்பீர்களா?

பதில்: நான் எந்தப் பதவியும் கேட்கவில்லையே. அவர்கள் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறார்கள். ஆகவே இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்காதீர்கள். நாங்கள் தனியாக நின்றிருந்தால் கலைஞர்தான் ஆட்சிக்கு வந்திருப்பார். தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாங்கள் பிடிவாதமாக இருந்தோம்.

கேள்வி: அ.தி.மு.க. கூட்டணியில் நீங்கள் தொடர்ந்து இருப்பீர்களா?

பதில்: அ.தி.மு.கவுடன் அமைத்துக் கொண்டது தேர்தல் கூட்டணிதான். ஜெயலலிதா முதலவராக ஆகவேண்டும். நான் எதிர்கட்சி தலைவராக வேண்டும். அதற்குள் பொடி வைத்தால் எப்படி?

கேள்வி: தேர்தல் அறிக்கையில் கூறியதை எல்லாம் அ.தி.மு.க. நிறைவேற்றும் என்று நம்புகிறீர்களா?

பதில்: ஜெயலலிதா இன்னும் முதல்வராக பதவி ஏற்கவில்லை. தங்க முட்டையிடும் வாத்தை எத்தனை முட்டையிடும் என்று அறுத்துப் பார்த்தானாம் ஒருவன். அப்படி உள்ளது உங்கள் கேள்வி.

கேள்வி: இலங்கை பிரச்சனையில் சட்டசபையில் எவ்வாறு செயல்படுவீர்கள்?

பதில்:சட்டசபை கூடட்டும். அதுவரை பொறுத்திருங்கள். சட்டசபையில் மக்கள் பிரச்சனையை பேச பின் வாங்கமாட்டோம். 3 மாதங்களுக்கு பிறகுதான் அ.தி.மு.க. செயல்பாடு எப்படி என்று சொல்லமுடியும்.

கேள்வி: ஜெயலலிதாவை எப்போது சந்திப்பீர்கள்?

பதில்: சந்திக்கக்கூடாது என்பது அல்ல.

கேள்வி: ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்கும் விழாவுக்கு செல்வீர்களா?

பதில்: பதவி ஏற்பு விழாவுக்கு வாருங்கள் என்று அழைக்கின்றார்களா என்பதை முதலில் பார்ப்போம் என்றார்.

முன்னதாக கூட்டத்தில் பேசிய கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமசந்திரன், இந்த தேர்தலில் தே.மு.தி.க. ஒரு அந்தஸ்தை பெறுவதோடு, அதில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தஸ்து கிடைத்துள்ளது. ஏதோ ஒரு கட்சி ஆரம்பித்துள்ளனர் என்றும், எத்தனை நாளைக்கு கட்சியை நடத்துவார்கள் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஆட்சி அமைக்கும் கட்சிக்கு அடுத்த கட்சி என்ற நிலையில் தமிழக மக்கள் நமக்கு அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு விஜயகாந்த் புதிய அரசியலை தந்து வருகிறார்.

ஊழலையும், வறுமையையும் ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் புதிய விஜயகாந்த் செயல்பட்டு வருகிறார். இதை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான், இன்று சாதிக் கட்சிகள் எல்லாம் எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியாமல் போய்விட்டன.

தே.மு.தி.க. கட்சி தலைவராக சட்டமன்றத்தில் விஜயகாந்த் அமர இருக்கிறார். நான் கோவையில் பேசிய ஒரு கூட்டத்தில், கேப்டனை பார்க்க ஆசையாக இருந்தால் சட்டமன்றத்துக்கு வாருங்கள் என்றும், எதிர்க்கட்சி தலைவர் உட்காரும் இடத்தில் உட்கார இருக்கிறார் என்றும் கூறினேன். அது இன்றைக்கு நிரூபணமாகி இருக்கிறது. சட்டமன்றத்திற்கு செல்லும் பழைய ஆள் நான் ஒருவன்தான் என்று நினைக்கிறேன். ஆகவே சட்டமன்றத்தில் நாம் ஒரு புதிய முறையை கடைப்பிடித்தால், மக்கள் நம்மை மேலும், மேலும் வளர்ப்பார்கள் என்றார்.

தேமுதிகவுக்கும் அழைப்புண்டு-ஜெ:

இந் நிலையில் இன்று ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம், பதவி ஏற்பு விழாவுக்கு தேமுதிகவுக்கு அழைப்பு உண்டா என்று கேட்டதற்கு, அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு உண்டு. அனைவரும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்றார்.

English summary
DMDK MLAs should work for the people, said party president Vijaykanth. He also said, he will weigh Jayalalithaa's performance as CM after three months
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X