For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று முதல் மருத்துவம், பி.இ. படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆப் மார்க் அதிகரித்துள்ளது. பி.இ. படிப்பில் கட் ஆப் மார்க் 198-க்கு மேல் எடுத்தவர்களுக்குத் தான் நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இதேபோன்று எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு கட் ஆப் மார்க் 199.25-க இருக்கும் என்று கூறப்படுகின்றது.

பி.இ. படிப்பிற்கான விண்ணப்பங்கள் கிண்டி பொறியியல் கல்லூரி உள்பட 62 இடங்களில் கிடைக்கும். இதற்காக 2.20 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 500. இம்முறை சனி, ஞாயிறு விடுமுறையின்றி இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. மாணவர்கள் www.annauniv.edu/tnea2011 என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி மாலை 5. 30 மணிக்குள் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலருக்கு வந்து சேர வேண்டும்.

ஜூன் மாத இறுதியில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு முடிந்தவுடன் ஜூலை மாத முதல் வாரத்தில் பி.இ. கலந்தாய்வை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூன் மாதம் 2-ம் தேதி பிற்பகல் 3 மணி வினியோகம் செய்யப்படும். சனி, ஞாயிறு விடுமுறையின்றி தினமும் காலை 10 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 500. மாணவர்கள் www.tnhealth.org என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்திலிருந்தும் விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.

வரும் ஜூன் மாதம் 21-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதையடுத்து ஜூன் மாதம் 30-ம் தேதி எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கும்.

கோவையில் 4 இடங்களில்

கோவையில் 4 இடங்களில் பிஇ விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி (ஜிசிடி), காந்திபுரத்தில் உள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, ஏரோடிராம் அருகேயுள்ள ஆடவர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஜோதிபுரத்தில் உள்ள அண்ணா தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய இடங்களில் இன்று காலை 10 மணி முதல் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

English summary
BE, MBBS applications are given from today even on saturday and sunday without any holiday. Students can also download the BE applications from
 www.annauniv.edu/tnea2011 and MBBS application forms from www.tnhealth.org.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X