For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெறும் ரூ 20.88 கோடி மட்டுமே லாபம் ஈட்டிய எஸ்பீஐ!

By Shankar
Google Oneindia Tamil News

State Bank of India Logo
மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் அடியோடு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த காலாண்டில் அந்த வங்கி வெறும் ரூ 20.88 கோடியை மட்டுமே லாபமாக ஈட்டியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு வெளிநாடுகளிலும் நிறைய கிளைகள் உள்ளன. அரசின் வங்கி என்ற பெருமையும் இந்த வங்கிக்குதான் உண்டு.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் அனைத்து செலவினங்களும் போக இந்த வங்கி ரூ 1866.60 கோடி லாபம் ஈட்டியது. ஆனால் இந்த காலாண்டில் படு மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது இந்த வங்கி.

இந்தச காலண்டில் வரிகள், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட நிர்வாகச் செலவுகள் போக வெறும் ரூ 20.88 கோடியே நிகர லாபமாக மிஞ்சியுள்ளது இந்த வங்கிக்கு.

அதே நேரம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்த மொத்த வருவாயை விட, இந்த காலாண்டில் 18 சதவீதம் அதிகம் கிடைத்துள்ளது.

ஆனால் நிர்வாகச் செலவுகள் அதிகரிப்பு, ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்ந்தது போன்றவற்றால் நிகர லாபத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வங்கியின் பங்குகள் மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் 6.34 சதவீதம் குறைந்தது.

English summary
Net profit of country's largest lender State Bank of India (SBI) for the fourth quarter ended March 2011 nosedived to Rs 20.88 crore against Rs 1,866.60 crore in the same quarter in the previous fiscal. The erosion in the standalone net profit is mainly on account of higher provisioning against bad loans, operating expenses including employee cost besides tax outgo of over Rs 900 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X