For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக எம்.எல்.ஏ.க்கள் 234 பேரில் 120 பேர் கோடீஸ்வரர்கள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைக்கு தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.க்களில் பாதி பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 234 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு அவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 234 பேரில் 120 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது மொத்தமுள்ள எம்.எல்.ஏ.க்களில் 52 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.

தற்போது சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பாதி பேர் கோடீஸ்வரர்கள். கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 எம்.எல்.ஏ.க்களில் வெறும் 57 பேர் தான் கோடீஸ்வரர்கள். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

தற்போதுள்ள 120 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் கட்சி அடிப்படையில் பார்த்தால் திமுகவினர் முன்னிலை வகிக்கின்றனர். தேர்வாகியுள்ள 23 திமுக எம்.எல்.ஏ.க்களில் முக்கால்வாசிக்கும் அதிகமானவர்கள் கோடீஸ்வரர்கள்.

அடுத்தபடியாக மொத்தமுள்ள 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் கோடீஸ்வரர்கள். 146 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 55 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.

English summary
234 MLAs have been elected in the recently held TN assembly election. Out of 234, 120 MLAs are millionaires. Party wise DMK stands first, as 3/4th of it 23 MLAs are millionaires. Congress gets second place, as 3 out of 5 MLAS are millionaires.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X