For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையின் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் வீட்டில் ராணுவம் சோதனை

By Chakra
Google Oneindia Tamil News

Pillayan
கொழும்பு: இலங்கையின் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானின் வீட்டில் ராணுவம் இன்று சோதனை நடத்தியது.

இலங்கை அமைச்சரான கருணாவின் ஆதரவாளரான மதியழகன் என்பவர் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிள்ளையானின் கட்சியைச் சேர்ந்தவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எட்வின் கிருஷ்ணானந்த ராசா என்பவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பிள்ளையான் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

மதியழகனின் கொலையைத் தொடர்ந்து பிள்ளையானின் ஆதரவாளரான இலங்க குமார் என்பவரை கருணா தரப்பு கொலை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் அதிகாரப்பூர்வ வீடு மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில் ராணுவம் சோதனை நடத்தியது. இதற்கு பிள்ளையானின் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

English summary
Army personnel conducted a search of the Batticaloa residence of Eastern Province Chief Minister S. Chandrakanthan (alias Pillayan), which was condemned by TMVP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X