For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துக்க தினத்திற்காக கடைகளை அடைக்கச் சொன்னோமா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதில்

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: மே 18-ம் தேதி அன்று தமிழீழ தேசிய துக்க தினத்திற்காக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளை அடைக்க ஒரு போதும் நிர்பந்தம் செய்யவில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் இனப் படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே 18-ம் தேதி தமிழீழ தேசிய துக்க நாளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் எந்த ஒரு வர்த்தக நிறுவனத்தினையோ அல்லது பொது நிறுவனத்தினையோ மூடும்படி கேட்டுக் கொள்ளவில்லை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வர்த்தக நிறுவனங்களை மூடும்படி கோரியாதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்க தகவல் துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் கூறியதாவது,

தமிழர் விடுதலைக்கு தமிழக மக்களும், வர்த்தகப் பெருமக்களும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு அளப்பரியது என்பதனை நாங்கள் அறிவோம்.

துயரத்தை பகிர்ந்து கொள்ளும் இந்தக் காலகட்டத்தில் பொதுமக்களுக்கோ அல்லது எந்த ஒரு வர்த்தக நிறுவத்திற்கோ எந்த விதமான அசெளகரியத்தையும் கொடுக்கக் கூடாது என்பது நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடு.

எனவே, துயரம் சுமந்த இதயத்துடன் அனைவரையும் நினைவேந்தல் நிகழ்வுகளில் இயன்றவரை பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

English summary
The Transnational Government of Tamil Eelam (TGTE) observes May 18 as the 'National Mourning Day of Tamil Eelam', and the week between May 12 and May 18 as the 'Memorial Week', to commemorate the 'massacre' of Tamil civilians by Sri Lankan forces fighting the LTTE. Rumours are there that TGTE has asked the merchants to close the shops today. TGTE has rubbished this rumour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X