For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காமன்வெல்த் ஊழல் வழக்கு-சுரேஷ் கல்கமாடி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Google Oneindia Tamil News

Kalmadi
டெல்லி: காமன்வெல்த் போட்டியின் மூலம் பல கோடி ஊழல் புரிந்த ஊழல் பெருச்சாளியான, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் கல்மாடி மீது சிபிஐ, முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் முக்கியக்குற்றவாளியாக கல்மாடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

60 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில், டைமிங் ஸ்கோரிங் மற்றும் ரிசல்ட் சிஸ்டத்துக்கான காண்டிராக்ட் விட்டதில் ரூ. 141 கோடி அளவுக்கு ஊழல் புரிந்துள்ளார் கல்மாடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டி ஒருங்கி்ணைப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில் மிகப் பெரிய அளவிலான அதிகாரங்களை வைத்திருந்தார் கல்மாடி. இதைப் பயன்படுத்தி காண்டிராக்ட் விட்டதில் அவர் ஊழல் புரிந்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

சதி, மோசடி, தவறான நடத்தை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கல்மாடி தவிர கல்மாடியின் உதவியாளரான லலித் பனோட், வி.கே.வர்மா, ஜெயச்சந்திரன், சுர்ஜித் லால், ஏஎஸ்வி பிரசாத் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கையில் மேலும் 3 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் அவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

English summary
The Central Bureau of Investigation (CBI) today named sacked Commonwealth Games boss Suresh Kalmadi as the prime accused in its first chargesheet filed in connection with the scam in the mega sporting event. The sixty-page chargesheet pertains to alleged bungling in the Rs. 141-crore contract for the Timing Scoring and Results (TRS) system. The chargesheet says that Kalmadi as the Chairman of the CWG Organising Committee (OC) was the person with supreme powers and the overriding authority in awarding the contract. He has been charged with conspiracy, forgery, misconduct and under provisions of the Prevention of Corruption Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X