For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 ஜி வழக்கு: ஐந்து நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுப்பு

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: 2 ஜி வழக்கில் சிறையில் உள்ள யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குநர் கவுதம் தோஷி உள்ளிட்ட 5 கார்ப்பொரேட் நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவி்ட்டது டெல்லி உயர் நீதிமன்றம்.

2 ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிபி ரியல்டிஸ் புரமோட்டர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸின் ஹரி நாயர், சுரேந்திர பிபாரா உள்ளிட்டோரும் தங்களுக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த ஐவரின் மனுக்களையும் விசாரித்த நீதிபதி அஜீத் பாரிஹோக், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இவர்களின் கோரிக்கையில் அடிப்படை நியாயமில்லாததால் ஜாமீன் வழங்க முடியாது என அறிவித்த நீதிபதி, தனது விரிவான ஆணையை படித்துக் காட்டவில்லை.

English summary
The bail pleas of five corporate executives, including Unitech group MD Sanjay Chandra and Group MD of Reliance ADAG Gautam Doshi, in the 2G scam case were on Monday dismissed by the Delhi high court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X