For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15 மணி நேர கராச்சி தலிபான் முற்றுகை முடிந்தது-13 பேர் பலி

Google Oneindia Tamil News

Taliban Attack
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள விமானப்படைத் தளத்தை ஞாயிற்றுக்கிழமை தாக்கிய தலிபான் தீவிரவாதிகளை கிட்டத்தட்ட 15 மணி நேர கடும் சண்டைக்குப் பின்னர் ஒடுக்கியது பாகிஸ்தான் ராணுவம்.

இந்த கடும் சண்டையில் 15 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் வரலாற்றில் இவ்வளவு பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவரை நடந்ததில்லை என்பதால் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் பரபரப்பாகிப் போனது.

தீவிரவாதிகளின் முற்றுகையில் சிக்கியுள்ள கடற்படைத் தளத்தில் தொடர்ந்து பல குண்டுகள் வெடித்தன.

பாகிஸ்தானின் அதிஉயர் பாதுகாப்பு கொண்ட தளம் எனப்படும் கராச்சியின் பிஎன்எஸ் மேஹ்ரான் கடற்படைத்தளத்தில் நேற்று இரவு 10.40 மணிக்கு தலிபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்கத் தொடங்கினர்.

அருகில் உள்ள விமானப்படைத் தள அருங்காட்சியகம் வழியாக தீவிரவாதிகள் உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். மொத்தம் 5 குண்டுகள் வெடித்ததாகவும் 20 நிமிடங்கள் வரை துப்பாக்கிச் சண்டை நடக்கும் சப்தம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இந்த குண்டுவெடிப்புக்கு தாங்களே காரணம் என பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்கும் படலமாக இந்த சம்பவத்தை நடத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

கராச்சி கடற்படை தளத்தில் இருந்த அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்கள் பி 3 சி ஓரியனை குறித்து ராக்கெட் குண்டுகளை வீசி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் தலிபான்கள். இதில் இரண்டு விமானங்கள் முற்றிலும் நாசமாகி விட்டது. இவை இரண்டும் அமெரிக்கத் தயாரிப்பு கண்காணிப்பு விமானங்களாகும்.

இதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருமாறு முப்படைகளையும் கேட்டுக் கொண்டார் பிரதமர் கிலானி.

இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினரும், கமாண்டோப் படையினரும் கடும் பதில் சண்டையில் ஈடுபட்டு இன்று பிற்பகல் வாக்கில் தீவிரவாதிகளின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

இந்த சண்டையின்போது பாகிஸ்தான் ராணுவத் தரப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தரப்பில் பலர் கொல்லப்பட்டனர். 7 பேர் உயிருடன் சிக்கினர். 5 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பிடிபட்ட தீவிரவாதிகளை ரகசிய இடத்திற்குக் கொண்டு போய் ராணுவத்தினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தாக்குதலில் கடற்படைத் தளம் பெரும் சேதத்தை சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் கடற்படைத் தளத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ந்து போயுள்ளது. அமெரிக்காவும் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

English summary
Heavily-armed Taliban gunmen stormed a major naval airbase in Pakistan's port city of Karachi, destroying two US-made surveillance aircraft and killing at least five security personnel, three weeks after slaying of al-Qaeda chief Osama bin Laden by American forces. Around 15-20 gunmen struck PNS Mehran, the naval air station within Faisal airbase, at about 10.40 pm last night, lobbying grenades and firing indiscriminately with automatic weapons that triggered gun battles with security forces. Fifteen loud explosions were heard from the base, the headquarters of Pakistan's naval air arm, following the attack and intermittent firing was reported till this morning. Tehreek-e-Taliban Pakistan, which has stepped up attacks on security installations since the May 2 death of bin Laden, has claimed responsibility for the assault.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X