For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீரா ராடியா குறித்து எழுதப்பட்ட புத்தகத்தை வெளியிட தடை

Google Oneindia Tamil News

டெல்லி : அரசியல் புரோக்கர் நீரா ராடியா குறித்து எழுதப்பட்ட புத்தகத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர் நீரா ராடியா. இவர் பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருடன் பேசிய தொலைபேசி உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆர்.கே.ஆனந்த் என்ற வழக்கறிஞர் நீரா ராடியா குறித்து ஒரு நூலை எழுதியுள்ளார். அதில் நீரா ராடியா தொலைபேசிப் பேச்சுக்கள் அடங்கிய விவரங்களை தொகுத்து புத்தகமாக்கியுள்ளார்.

இதை எதிர்த்து நீரா ராடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கோர்ட், புத்தகத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் ஆனந்த்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை 22ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

English summary
Delhi HC has stayed the release of a book on Nira Radia. Delhi lawyer Anandh has written a book on Nira Radia. She had objected this book and sued in HC. The bench of HC has stayed the book's release and ordered to issue notice to Lawyer Anandh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X