For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெதர்லாந்தில் புலிகளின் ஆயுத கொள்முதல் தலைவர் கைது

By Chakra
Google Oneindia Tamil News

Netherlands
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டில் விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஞானம் என்பவரும் நெதர்லாந்து உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் புலிகளின் மற்றொரு முக்கியத் தலைவரான நெடியவன் நார்வே நாட்டு தலைநகர் ஓஸ்லோவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ராமச்சந்திரன் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமச்சந்திரனிடம் இருந்து நெதர்லாந்து உளவுப் பிரிவினர் கைப்பற்றிய கம்ப்யூட்டர், பென் டிரைவ், ஆவணங்களில் புலிகள் அமைப்புக்காக திரட்டப்பட்டு, சேமித்து தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி வசூலிக்கப்பட்டது தொடர்பாக நெதர்லாந்து நாட்டில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் தான் நெடியவனை நார்வே போலீசார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் ரேடியோ நெதர்லாந்து வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க உளவுப் பிரிவான எப்பிஐயிடம் பார்த்தீபன் தவராஜா என்ற புலிகளின் முக்கிய தலைவர் சிக்கியுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடத்த நெதர்லாந்து போலீஸ் படை அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்கியதில் முக்கிய பங்கு வகித்தவரான பார்த்தீபனிடம் அமெரிக்கா நடத்தியுள்ள விசாரணையில், அவர் 20 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வெடி பொருட்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், படகுகளில் பொருத்தப்படும் துப்பாக்கிகள், ஏவுகணைகள், மெஷின் கன்கள், கிரனைடுகள்-கிரனைட் லாஞ்சர்கள், ரேடார்கள் உள்ளிட்டவற்றை சீனா பல நாடுகளிலும் வாங்கி புலிகளுக்கு அனுப்பி வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும்,

தான் ஆயுதங்கள் வாங்க நெதர்லாந்தில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவர் உதவினார் என்று பார்த்தீபன் வாக்குமூலம் தந்துள்ளதாகவும், இதன் அடிப்படையிலேயே ராமச்சந்திரனை நெதர்லாந்து போலீசார் கைது செய்ததாகவும் அந்த ரேடியோ தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நெடியவனிடம் விசாரணை நடத்த நெதர்லாந்து போலீஸ் குழு நார்வேவுக்கும் செல்லும் என்றும் அந்த ரேடியோ தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கே.பியிடமும் விசாரணை நடத்த நெதர்லாந்து போலீசார் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீசிடம் நெதர்லாந்து வெளியுறவுத்துறை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

English summary
Dutch authorities investigating the financial network of the Tamil Tiger leaders in the Netherlands plan to interrogate former and current LTTE leaders in Sri Lanka and are in the process of seeking permission from the Sri Lankan authorities, a Dutch media report said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X