For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோயம்பேட்டில் 6.5 டன் மாம்பழங்கள், 600 கிலோ ரசாயனக் கற்கள் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 6.5 டன் மாம்பழங்களும், 600 கிலோ ரசாயன கற்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

புறநகர்ப்பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஏராளமான மாம்பழங்கள் வருகின்றன. வியாபாரிகள் இவற்றை ரசாயனக் கற்கள் மூலம் ஒரே நாளில் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர்.

அவ்வாறு ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிற்றுக் கோளாறு, புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதிகாரிகளின் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிடும் வியாபாரிகள் தொடர்ந்து ரசாயனக் கற்களை பயன்படுத்துகின்றனர்.

இதை தடுக்க சுகாதார அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன் நடத்திய சோதனையில் 10 டன் மாம்பழங்களும், 1 டன் ரசாயன கற்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று நேற்று முன்தினம் காலையில் உணவு ஆய்வாளர் சதாசிவம் தலைமையிலான அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைத்த 6.5 டன் மாம்பழங்களையும், 600 கிலோ ரசாயன கற்களையும் பறிமுதல் செய்தனர்.

English summary
Health department officials have confiscated 6.5 ton mangoes and 600 kg chemical stones from Chennai Koyambedu market. Merchants are using chemical stones to make the mangoes ripe in a day. This type of mangoes can lead to digestive problems and even cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X