For Daily Alerts
மும்பை பங்குச் சந்தையில் 205 புள்ளிகள் உயர்வு

காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் 142 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், பிற்பகலில் 244 புள்ளிகள் வரை உயர்ந்தது.
நிப்டியில் 71 புள்ளிகள் வரை ஏற்றம் காணப்பட்டது.
காலாண்டு முடிவுகள் காரணமாக ரிலையன்ஸ் இன்ப்ரா, ரிலையன்ஸ் பவர் பங்குகள் அதிக விலையில் கைமாறின.
ஹிண்டால்கோ, ஐசிஐசிஐ வங்கி, ஜெயப்பிரகாஷ் அசோஸியேட்ஸ், டிஎல்எப், மகிந்திரா அண்ட் மகிந்திரா பங்குகள் லாபத்தில் கைமாறின.
இந்தியப் பங்குச் சந்தையைப் போலவே, ஹாங்காங், சிங்கப்பூர், தைவான், இந்தோனேஷியா, தென்கொரியா போன்ற இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் இன்று லாபகரமான பங்கு வர்த்தகம் நடந்தது.