For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுக்கடலில் தவித்த தமிழக மீனவர்கள் மீட்பு

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: பாம்பன் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது பழுதாகி நடுக்கடலில் நின்ற படகில் இருந்து 14 மீனவர்களை கடலோர காவல் படை மீட்டுள்ளது.

கடந்த 27 ம் தேதி அன்று இரவு பாம்பன் கடல் பகுதியில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு படகில் இருந்து, செயற்கை கோள் உதவியுடன் செயல்படும் அபாய எச்சரிக்கை கருவி மூலமாக இந்திய கடற்பாதுகாப்பு படையினருக்கு அபாய சிக்னல் கிடைத்தது.

இதனையடுத்து, அந்த பகுதிக்கு மண்டபம் கடற்பாதுகாப்பு நிலையத்தில் இருந்து கடற்பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர்.

அப்போது, பாம்பன் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகு ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது.

அந்த படகில் தவித்துக் கொண்டிருந்த 14 மீனவர்களை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். மேலும், பழுதான மீன்பிடி படகும், மீட்பு படகு உதவியுடன் மண்டபம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கடற்படையினரின் விரைவான நடவடிக்கை மூலம் விலைமதிக்க முடியாத 14 மீனவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

English summary
Indian coast guard has rescued 14 fishermen from Tamil Nadu in mid sea near Rameswaram. They were stranded after their boat gone repair. All the rescued fishermen brought to Mandapam port.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X