For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனிமொழிக்கு ஜாமீனா, இல்லையா-ஜூன் 3ம் தேதி தீர்ப்பு

Google Oneindia Tamil News

Kanimozhi
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பது ஜூன் 3ம் தேதி தேரியும். அன்றைய தினம் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனிமொழி தவிர கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத் குமார் ரெட்டியும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இவரது மனு மீதும் அன்றே தீர்ப்பளிக்கப்படுகிறது.

ஜூன் 4ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. எனவே 3ம் தேதியே கனிமொழி, சரத்குமார் மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகள் யாருக்குமே ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த ஜாமீன் மனுக்களையும் டெல்லி உயர்நீதிமன்றம்தான் தள்ளுபடி செய்திருந்தது. எனவே கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Delhi HC may issue an order on Kanimozhi's bail plea on June 3. HC has adjourned the order on the plea. As Delhi HC goes to summer vacation from June 4, the order is expected by June 3.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X