For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பையில் எவ்வளவு மழை பெய்யும்?-ரூ. 25,000 கோடிக்கு 'பெட்' கட்டும் புக்கிகள்!

Google Oneindia Tamil News

Mumbai Rain
மும்பை: எது எதற்குத்தான் பெட் கட்டுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. மும்பையில் இந்த பருவ காலத்தில் எந்த அளவுக்கு மழை பெய்யும் என்று கூறி சூதாட்டக்காரர்கள் பெட் கட்டி வருகின்றனராம். கிட்டத்தட்ட ரூ. 25,000 கோடி அளவுக்கு மழையை வைத்து அடுத்த நான்கு மாதங்களில் பணம் கைமாறப் போவதாக தகவல் கூறுகிறது.

கிரிக்கெட்டைத்தான் சூதாட்டம் ஆட்டிப்படைக்கிறது என்றால் இப்போது பல்வேறு பொருட்களின் மீதும் பெட் கட்டி பணம் பார்க்க ஆரம்பித்துள்ளது புக்கிகள் கூட்டம்.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மீதும் தாறுமாறாக பெட் கட்டி பணம் பார்த்தனர்.

இந்த நிலையி்ல மும்பையில் இந்த பருவ காலத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்று பெட் கட்ட ஆரம்பித்துள்ளனராம் மும்பையில். இந்த சூதாட்டத்தில் இறங்கியிருப்பவர்கள் மும்பையைச் சேர்ந்த புக்கிககள் இல்லையாம். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் மும்பையில் முகாமிட்டு இந்த பெட்டைக் கட்டி வருகின்றனராம்.

கிட்டத்தட்ட ரூ. 25,000 கோடி அளவுக்கு இந்த சூதாட்டத்தில் பணம் புழங்குவதாக அதிர்ச்சித் தகவல் கூறுகிறது.

தென் மேற்குப் பருவ மழை தற்போது தொடங்கியுள்ளது. இந்த மழை ஜூன் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மும்பைக்கு வந்து சேரலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை வைத்துத்தான் தற்போது பெட்டிங் தொடங்கியுள்ளது.

அதாவது இந்த மழைக்காலத்தில் மும்பையில் 2000 மில்லிமீட்டர் மழை பெய்யும் என்பதுதான் பெட். கொலாபா மற்றும் சான்டாகுரூஸ் வானிலை ஆய்வு மையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு தனித் தனியாக ரேட் நிர்ணயித்து இந்த முறை பெட் கட்டி வருகின்றனராம்.

இதுகுறித்து ஒரு புக்கி கூறுகையில், கிரிக்கெட் போட்டிகள் மீது கட்டப்படும் பெட்டுக்கும், இந்த மழை பெட்டுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. வானிலை ஆய்வு மையங்களின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்துத்தான் நாங்கள் பெட்டிங்கில் ஈடுபடுவோம் என்கிறார்.

1700 மில்லி மீட்டர் மழைக்கு 32 பைசாவும், 1800 மில்லிமீட்டர் மழைக்கு 55 பைசாவும், 1900 மில்லிமீட்டர் மழைக்கு 1.05 ரூபாயும் பெட் வைக்கப்படுகிறது. இது கொலாபா பிராந்தியத்துக்கான பெட்டிங்.

சான்டாக்ரூஸைப் பொறுத்தவரை 1800 மில்லிமீட்டருக்கு 21 பைசா, 1900 மில்லிமீட்டருக்கு 42 பைசா, 2000 மில்லிமீட்டருக்கு 95 பைசா, 2100 மில்லிமீட்டருக்கு ரூ. 1.45 என பெட்டிங் கட்டணம் நிர்ணயித்துள்ளனராம் புக்கிகள்.

கிட்டத்தட்ட ரூ. 25,000 கோடி வரை இந்த பெட்டிங்கில் பணம் புழங்கும் என்று கூறப்படுகிறது.

நாடு உருப்பட்டாற் போலத்தான்....!

English summary
Mumbai will soon play host to the bookie community from across the country, who will visit the city to accept bets and cash-in on the monsoon season. According to punters, the Monsoon will hit the city between June 11 and June 13. The bookies are likely to mix business with pleasure and occupy posh hotels across the city. Close to Rs. 25,000 crore is expected to change hands in the next four months. Bookies predict a fairly good Monsoon with around 2,000 mm of rainfall this season. "In a first, separate bets will be accepted for Santacruz and Colaba this year," said a bookie, on condition of anonymity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X