For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு உத்தரவை மீறி ஜூன் 15க்கு முன்பே திறக்கப்பட்ட பள்ளிகள்

Google Oneindia Tamil News

நெல்லை : நெல்லை, குமரி மாவட்டங்களில் அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகளில் வகுப்புகள் நடப்பதாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து ஜூன் 15ம் தேதி வரை கண்டிப்பாக பள்ளிகளை திறக்க கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் சர்க்குலர் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாறியதால் திடீரென சமச்சீர் கல்வி பாடத்திட்டம் நிறுத்தப்பட்டது. பழைய பாடத்திட்டமே மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பு ஜூன் 1ல் இருந்து ஜூ்ன் 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

நன்றாக படிப்பவர்களை மட்டுமே வளைத்து பிடித்து சேர்க்கை நடத்தை இத்தனை ஆண்டுகளாய் சாதனை படைத்த மெட்ரிக் பள்ளிகள் பாடத்திட்ட குழப்பதால் நிலை குலைந்துள்ளன.

இந்த ஆண்டு மெட்ரிக் பிளஸ்டூ பொது தேர்வில் சாதிப்பதே கடினம் என்ற சூழல் உருவாகியுள்ள சூழ்நிலையில் சில பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கோடை விடுமுறையிலும் வகுப்புகளுககு வரவழைத்து பாடம் நடத்தினர்.

நெல்லை மாவட்டத்தில் 122 மெட்ரிக் பள்ளிகலும், குமரி மாவட்டத்தில் 128 மெட்ரிக் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. ஜூன் 15 வரை கண்டிப்பாக பள்ளிகளை திறக்க கூடாது என்ற அரசு உத்தரவை மீறி பல பள்ளிகளில் வகுப்புகள் நடத்துவதாக மெட்ரிக் பள்ளி ஆயவாளர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

காலை 8 மணிக்கே மாணவர்களை வரவழைத்து இரவு 8 மணிவரை வகுப்புகள் நடப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினசரி மாணவ, மாணவிகள் போனி்ல் புகார் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூ்ன் 15ம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதுவரை யாரும் பள்ளிகளை திறக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுளளது. மெட்ரிக் பள்ளிகளும் இந்த உத்தரவை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

நெல்லை, குமரி மாவட்டங்களில் அரசு உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் சிலர் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் நடத்த அரசு வாய்மொழி உத்தரவு வழங்கியதாக கூறுகிறார்கள்.

English summary
Some of the private schools have violated the GO on re opening of schools. The GO has ordered the schools not to open before June 15. But these schools are opened already and conducting classes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X