For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-சிவசங்கரனிடம் சிபிஐ விசாரணை

Google Oneindia Tamil News

CBI
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக ஏர்செல் நிறுவன முன்னாள் தலைவரான தொழிலதிபர் சிவசங்கரனிடம் சிபிஐ விசாரணை நடத்தி வாக்குமூ்லம் பெற்றுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு ஏர் செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தனக்கு தயாநிதி மாறன் நிர்ப்பந்தம் கொடுத்ததாக சிவசங்கரன் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஏர்செல் நிறுவன நிர்வாகம் மாறிய உடனேயே அதற்கு 2ஜி லைசென்ஸ் வழங்கப்பட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது. கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்ஸிஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதாகவும், எனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதி மாறனுக்கும் பங்கு இருப்பதாகவும் டெஹல்கா இதழ் செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில் தயாநிதி மாறன் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளில் பெரும் முறைகேடு செய்ததாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. இதனால் தயாநிதி மாறனுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் சிவசங்கரனிடம் சிபிஐ விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கியுள்ளது.

English summary
CBI has grilled Aircel's former chairman Sivasankaran and got his statement in 2g spectrum case. Already Sivasankaran had blamed Dayanidhi Maran pressurised him to sell the shares of Aricel to Malaysia's Maxis communication ltd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X