For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எஸ்.எஸ்.மேனன், நிரூபமா ராவ் விரைவில் கொழும்பு பயணம்-ஏன்?

Google Oneindia Tamil News

SS Menon and Nirupama Rao
டெல்லி: இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று ஐ.நா. நிபுணர் குழுவில் கூறப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியிலிருந்து இலங்கையைக் காப்பாற்றுவது தொடர்பாக விரைவில் கொழும்பு சென்று இலங்கை அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிரூபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ஆகியோர் செல்லவுள்ளனராம்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் இலங்கை பெரும் நெருக்கடியில் மாட்டியுள்ளது. உலக அளவில் அதைச் சுற்றி இரும்புக் கரங்கள் வளைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் இந்தியாவின் உதவியை அது நாடி நிற்கிறது. இந்தியாவோ நேரடியாக உதவ முடியாமல் மறைமுகமாக பல்வேறு ஆலோசனைகளை இலங்கைக்குக் கூறி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து விவாதிக்க மேனனும், நிரூபமா ராவும் கொழும்பு செல்கின்றனர். அங்கு ராஜபக்சேவைப் பார்த்து இவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனராம். போருக்குப் பிந்தைய தமிழர் மீள் குடியேற்றம்,மறுவாழு குறித்து விவாதிக்கப் போவதாக வெளியில் கூறப்பட்டாலும், உள்ளுக்குள் போர்க்குற்ற பிரச்சினையிலிருந்து இலங்கையை காப்பது தொடர்பான பயணமாகவே இது கருதப்படுகிறது.

English summary
NSA S.S.Menon and External affairs secretary Nirupama Rao will visit Colombo soon. They will hold discussion with Rajapakse in UN experts panel's report on Lankan warcrimes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X