For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியூஸிலாந்து நிறுவனத்தை வாங்கியது இன்போஸிஸ்!

By Shankar
Google Oneindia Tamil News

Iinfosys
பெங்களூர்: நியூஸிலாந்தைச் சேர்ந்த ஜென்-ஐ சாப்ட்வேர் நிறுவனத்தை ரூ 44 கோடிக்கு வாங்கியது இந்தியாவின் பிரபல ஐடி நிறுவனமான இன்போஸிஸ்.

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ 100 கோடி வருவாய் அதிகரிக்கும் என இன்போஸிஸ் எதிர்ப்பார்க்கிறது.

டெலிகாம் நியூஸிலாந்து குழுமத்தின் ஒரு அங்கம் இந்த ஜென் - ஐ நிறுவனம். ஆக்லாந்து, கிறைஸ்ட்சர்ச் மற்றும் வெலிங்டன் நகரங்களில் இயங்கும் இந்த நிறுவனத்துக்கு ஏற்கெனவே 110 பணியாளர்களைத் தந்திருந்தது இன்போஸிஸ்.

ஜென் -ஐ மற்றும் இன்போஸிஸ் இடையே ஏற்பட்டுள்ள இந்த புதிய உறவு, நியூஸிலாந்தில் வலுவான அடித்தளத்தை இன்போஸிஸுக்கு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நியூஸிலாந்துக்கான இன்போஸிஸ் இயக்கத்தை கவனிக்கும் பொறுப்பு பாட்ரிக் கோவன்ஹோவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

English summary
Infosys Technologies has acquired the software solutions business of New Zealand-based Gen-i for NZ$5 million (Rs 44 crore). Gen-i is part of the Telecom New Zealand Group.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X