For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாறன் சகோதரர்கள் கொலை மிரட்டல்: சிவசங்கரன் புகார்

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: தனக்கு, மாறன் சகோதரர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக சிபிஐ விசாரணையின்போது ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவன முன்னாள் தலைவர் சி.சிவசங்கரன் புகார் கூறியுள்ளார்.

2001 ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையின் ஒருபகுதியாக ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரனிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின்போது, அவர் அளித்த வாக்குமூலத்தில், தனது ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிடும்படி அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் இதை தயாநிதி மாறன் மறுத்துள்ளார்.

English summary
Former Aircel chief C Sivasankaran has told the CBI that the then telecom minister Dayanidhi Maran and his brother Kalanidhi had allegedly issued life threats forcing him to sell his firm to a Malayasia-based tycoon, a charge rejected by the DMK leader. He has provided the CBI a list of over 10 witnesses, mostly based abroad, to buttress his point that he was threatened by the Maran brothers, CBI sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X