For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு-நாளை அறிவிக்கிறது சுப்ரீம் கோர்ட்

Google Oneindia Tamil News

Kanimozhi
டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை நாளை உச்சநீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி இருவரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாகி விட்டன. இதையடுத்து இருவரும் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

உச்சநீதிமன்ற விடுமுறைக் கால பெஞ்ச் இந்த மனுக்கள் மீ்து நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. நீதிபதிகள் பி.எஸ்.செளஹான் மற்றும் ஸ்வதேந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நாளை தீர்ப்பை அறிவிக்கும்.

இவர்களது வழக்கு 16வது வழக்காக நாளைய பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் 2வது குற்றப்பத்திரிக்கையில், கனிமொழி, சரத்குமார் ரெட்டியின் பெயர்கள் கூட்டுச் சதியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Supreme Court will hear tomorrow the bail pleas of DMK MP Kanimozhi and Kalaignar TV MD Sharad Kumar, accused in the 2G spectrum case. Kanimozhi, the 43-year-old daughter of DMK chief M Karunanidhi, and Kumar have challenged the Delhi High Court verdict rejecting their bail pleas. A vacation bench of justices B S Chauhan and Swatanter Kumar will take up the matter which is listed as Item No. 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X