For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15 முதல் மீன்பிடிக்க தடை

By Siva
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியில் வரும் 15-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன்களின் இனபெருக்க காலங்களில் விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்களின் இனப்பெருக்க காலங்களில் விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க 2 கட்டங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கிழக்கு கடற்கரை பகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் மே மாதம் 31-ம் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிக்கு வரும் 15-ம் தேதி முதல் ஜூலை மாதம் 31-ம் தேதி வரையிலும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

குமரி மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் கடந்த மே 31-ம் தேதியுடன் முடிவடைந்தது.
மணக்குடி முதல் நீரோடி வரையான மேற்கு கடற்கரை பகுதியில் வரும் 15-ம் தேதி முதல் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது என கூறப்படுகின்றது.

தற்போது குளச்சலில் உள்ள விசைப்படகுகள் கேரளா மற்றும் குஜராத் கடற்பகுதியில் மீன்பிடித்து வருகிறது.

இவை மேற்கு கடற்கரை பகுதியாக இருப்பதால் அங்கும் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu government has banned motorboats from fishing in the northern shores of Kanyakumari from june 15 till july 31. This may pave way to increase in fish price.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X