For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூலை 3-ம் தேதி நடக்கவிருந்த குரூப் 2 தேர்வு 30-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

By Siva
Google Oneindia Tamil News

மதுரை: ஜூலை 3-ம் தேதி நடைபெற இருந்த குரூப் 2 தேர்வு ஜூலை 30-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை உதவிப் பிரிவு அலுவலர், வணிக வரித்துறை உதவி அலுவலர் உள்பட 4 ஆயிரத்து 329 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தேர்வில் தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை உதவி அலுவலர் போன்ற பணியிடங்கள் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் இவற்றையும் சேர்த்து தேர்வு நடைபெற உள்ளது.

இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜூலை 3-ம் தேதிக்கு பதில் ஜூலை 30-ம் தேதி தேர்வு நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

இதன்படி மேலும் 281 உதவி பிரிவு அலுவலர்கள், கருவூலங்கள் மற்றும் கணக்கு துறைகளில் 485 கணக்காளர்கள், ஊராட்சி வளர்ச்சி முகமை, பஞ்சாயத்து ராஜ் துறைகளில் ஆயிரத்து 600 உதவியாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 366 பணியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 4 ஆயிரத்து 329 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கூடுதல் பணியிடங்களையும் சேர்த்து காலி பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தேர்விற்கு வரும் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

English summary
TNPSC group-2 exam which was scheduled to be held on july 3 has been postponed to july 30. The total number of vacancies have been increased to 6, 695 from 4, 329. The last date to submit the application is june 21.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X