For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டீசல், எரிவாயு விலையை உயர்த்த மன்மோகன் சிங்கிடம் அமைச்சர் வலியுறுத்தல்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வு குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு பிரதமரை மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்த்துவது குறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளபோதிலும் அந்த குழு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கூட்டப்படாமலேயே உள்ளது.

அதனால் குழுவை கூட்டி ஒரு முடிவை எடுக்குமாறு கடந்த வாரம் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஜெயபால் ரெட்டி வலியுறுத்தினார். எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 450 கோடி இழப்பு ஏற்படுவதால் விலை உயர்வு குறித்து விரைந்து முடிவு எடுக்குமாறு இன்று பிரதமரை சந்தித்து வலியுறுத்தினார்.

English summary
Oil minister Jaipal Reddy has met PM Manmohan Singh today and asked him to decide quickly about the increase in diesel and domestic LPG prices. He earlier met finister minister Pranabh Mukherjee regarding this issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X