For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்விக் கடன் வட்டியை உயர்த்தியது ஐடிபிஐ வங்கி!

By Shankar
Google Oneindia Tamil News

IDBI Bank Logo
கல்விக் கடன்களுக்கான வட்டியை திடீரென்று 50 புள்ளிகள் வரை உயர்த்திவிட்டது, பொதுத்துறை நிறுவனமான ஐடிபிஐ வங்கி. இது மாணவர்களையும் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ரிசர்வ் வங்கி சமீபத்தில்தான் ரெபோ மற்றும் ரிவர்ஸ் ரெபோ வட்டிகளை உயர்த்தியது. இதன் காரணமாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் வட்டி சுமையை உடனடியாக வாடிக்கையாளர்கள் மீது தள்ளி வருகின்றன வணிக வங்கிகள்.

இந்த முறை ரிசர்வ் வங்கி கால் சதவீதம்தான் வட்டியை உயர்த்தியிருந்தது. ஆனால் பொதுத்துறை வங்கிகளில் நகரப்புறங்களை குறிவைத்து இயங்கும் ஐடிபிஐ வங்கி, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு கடன்களுக்கான வட்டி வீதங்களை 50 புள்ளிகள் (அரை சதவீதம்) உயர்த்தியுள்ளது.

அதேபோல ஒரு வருட வைப்புத் தொகைகளுக்கான வட்டியையும் 50 சதவீதம் உயர்த்தியுள்ளது ஐடிபிஐ.

மற்ற பொதுத் துறை வங்கிகளும் சத்தமில்லாமல் வீட்டுக் கடன், கல்விக் கடன் உள்ளிட்டவற்றுக்கு வட்டிகளை உயர்த்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Public sector lender IDBI Bank on Saturday hiked interest rates for select category of educational loans and also retail term deposit rates by up to 50 basis points but left the base rate unchanged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X