For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசிஎஸ் நிறுவனத்தை விட்டு விலகிய 31,000 பணியாளர்கள்

By Chakra
Google Oneindia Tamil News

TCS
பெங்களூர்: 2010-11ம் ஆண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து 31,500 பணியாளர்கள் வேலையை விட்டுச் சென்றுள்ளனர். அதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தில் உலக அளவில் 69,685 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி கணக்கின்படி இந்த நிறுவனத்தில் 1,60,429 பேர் பணியில் இருந்தனர். இது இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி 1,98,614 ஆக அதிகரித்துள்ளது. இதில் இந்த ஆண்டில் மட்டும் பணியில் சேர்க்கப்பட்டவர்கள் 38,185 பேர்.

புதிய பணியாளர்கள் அதிகமாக சேர்ந்திருந்தாலும் இந்த நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு்ச் செல்வோர் எண்ணிக்கையும் மிக மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிதாக சேர்க்கப்பட்ட 69,685 பேரில், 62,092 பேர் இந்தியாவிலும் 7,593 பேர் வெளிநாடுகளிலும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

English summary
TCS's headcount stood at 1,60,429 as on April 1, 2010, which increased to 1,98,614 as on March 31 this year. Confirming the high attrition in the IT industry, country's largest software exporter TCS has said 31,500 employees left the organisation in 2010-11 while the company hired 69,685 new employees in India and overseas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X