For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் கேரள ஐஜி என்னைப் பழிவாங்குகிறார்- மணிகண்டன் பரபரப்புத் தகவல்

Google Oneindia Tamil News

Manikandan with the girl
நாகர்கோவில்: கேரளாவைச் சேர்ந்த 18 வயது சிறுமி அவரது பெற்றோரால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு கற்பழித்து பலரால் சீரழிக்கப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக, தனக்கு சாதகமாக நான் நடக்காததால் கேரள முன்னாள் ஐஜி ஒருவர் தன்னை இந்த வழக்கில் சிக்க வைத்துப் பழிவாங்குவதாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

எர்ணாகுளம் குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வரும் இநத விசாரணையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாணவியை பாலியல் பலத்காரம் செய்தது தெரிய வந்தது. அவர்களில் 65 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மலையாள நடிகர், விபசார புரோக்கர், உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் குமரி மாவட்டம் கண்ணுமூட்டை சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டனும் ஒருவர். இவர் இந்த வழக்கில் 17வது குற்றவாளி. இவர் மாணவியை தனது பங்களாவுக்கு அழைத்து வந்து பாலியல் பலத்காரம் செய்தார். அதன்பின்பு அவர் தனது காண்டிராக்டு தொழிலுக்கு சலுகை காட்டும் அதிகாரிகளுக்கு மாணவியை விருந்தாக்கி உள்ளார்.

குமரி மாவட்டத்தை சேர்ந்த பல அதிகாரிகள் மணிகண்டனின் பங்களாவுக்கு சென்று அந்த மாணவியை பாலியல் பலத்காரம் செய்துள்ளனர். நேற்று முன்தினம் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் நேற்று கண்ணுமூட்டில் உள்ள அவரது சொகுசு பங்களாவுக்கு அழைத்து வரப்பட்டார். கேரள போலீசாருடன் பங்களாவுக்கு வந்த மணிகண்டன் அங்கு மாணவியை பலத்காரம் செய்த அறை, அவரது விருந்தினர் அறை, மற்றும் பங்களாவில் உள்ள ரகசிய அறைகள் ஆகியவற்றை போலீசாருக்கு காண்பித்தார்.

போலீசார் அந்த அறைகளை அங்குலம் அங்குலமாக சோதனை போட்டனர். மேலும் மணிகண்டனின் அலுவலக அறையிலும் சோதனை போட்டனர். இதில் மணிகண்டனின் பங்களாவில் நடந்த விருந்துகள், அதில் கலந்து கொண்ட அதிகாரிகள், விருந்தினர்கள், அதற்கான செலவு போன்றவை குறிப்பிடப்பட்ட கையெடு மற்றும் சில ரகசிய ஆவணங்கள் போலீசாரின் கையில் சிக்கின.

பங்களாவில் 45 நிமிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் கேரள போலீசார் மணிகண்டனுடன் பங்களாவை விட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மணிகண்டனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பஙகளாவுக்குள் இருந்த மணிகண்டன் ஆதரவாளர்கள் பொதுமக்களை நோக்கி கற்களை வீசினர். உடனை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். பின்னர் உள்ளூர் போலீசார் நிலைமையை கட்டுபடுத்தி மணிகண்டனை நிருபர் முன் நிறுத்தினர்.

இதையடுத்து பத்திரிக்கை புகைப்படக்காரகள் மணிகண்டனை புகைப்படம் எடுத்தனர். அதன்பின் மீண்டும் மணிகண்டன் போலீஸ் ஜீப்பில் கேரளா அழைத்து செல்லப்பட்டார். மணிகண்டனிடம் நடத்திய விசாரணை, அவரது சொகுசு பங்களாவில் நடந்த சோதனை, அங்கி சிக்கிய முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தற்போது கேரள குற்றப்பிரிவு போலீசார் வசம் உள்ளது. அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தங்களின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

முன்னாள் ஐஜியே காரணம்

இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்திற்குக் கொண்டு வரப்பட்ட மணிகண்டன் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் ஜீப்பில் இருந்தபடி பேசுகையில், கேரளாவைச் சேர்நத முன்னாள் ஐஜி ஒருவர்தான் என்னை இந்த வழக்கில் தேவையில்லாமல் மாட்டியுள்ளார். நான் அவருக்கு சாதகமாக ஒரு நிலத்தை முடித்துத் தரவில்லை. இதனால் கோபமடைந்த அவர் என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளார். அவர்தான் இதற்குத் தூண்டுதல் என்று கூறினார்.

மணிகண்டன் கூறியுள்ள இந்தப் புதிய புகாரால் கேரளாவில் மேலும் சர்ச்சை வலுத்துள்ளது. அந்த முன்னாள் ஐஜியும் வழக்கில் சிக்குவார் என்று கூறப்படுகிறது.

English summary
Contractor Manikandan, who was arrested in Kerala girl's rape case, has alleged that a Kerala former IG is behind his arrest. Meanwhile Kerala police raided Mankandan's Kanniyakumari bungalow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X