For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.10 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு வட்டி ரத்து!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருந்து, தொழில் கல்விக்காக ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்ற மாணவர்களின் வட்டியை அரசே செலுத்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொழில் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வங்கிகள் மூலமாக கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வங்கிக் கடன் பெற்ற ஏழை மாணவர்களின் வட்டியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2009-10 கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது.

மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டமானது, இந்திய வங்கிகள் சங்கத்தின் கீழ் உள்ள வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அனைத்து வழிகளிலும் பெற்றோரின் ஆண்டு மொத்த வருமானம் ரூ.41/2 லட்சத்துக்குள் உள்ள, பொருளாதார நிலையில் நலிவுற்ற மாணவர்களுக்காக 2009-10 கல்வி ஆண்டில் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படிக்கும் நலிவடைந்த மாணவர்கள், ரூ.10 லட்சம் வரை கடன் பெற்றிருந்தால் வட்டியை அரசே செலுத்தும்.

இதற்காக, மாநில அரசின் உரிய அதிகாரிகளிடம் இருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து மாவட்ட, வட்ட, iனியன் அளவிலான அதிகாரிகளுக்கு தகவல் அளிக்குமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வட்டி ரத்து சலுகையை பெற கல்விக் கடன் பெற்ற வங்கிக் கிளையின் அதிகாரிகளை மாணவர்கள் அணுகி விண்ணப்பம் அளிக்கலாம்.

கடைசித் தேதி

இந்த திட்டத்தை அமல் படுத்துமாறு இந்திய வங்கிகள் சங்கத்தில் உள்ள உறுப்பு வங்கிகள் அனைத்தும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இந்த சலுகை திட்டம் தொடர்பான மற்ற இதர விபரங்களை மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் இணைய தளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். சட்டப்படி உரிய அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட ஆண்டு வருமான சான்றிதழுடன் விண்ணப்பித்ததும் கல்விக் கடனுக்கான வட்டித் தொகை வரவு வைக்கப்படும்.

இதற்கான, விண்ணப்பங்களை அந்தந்த வங்கிக் கிளைகளில் அளிப்பதற்கான கடைசித் தேதி ஜுலை 20 (20-7-2011) ஆகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Human Resource Development (HRD) Ministry has finalised the modalities for implementation of a new subsidised Central education loan scheme for students of economically weaker sections. Full interest subsidy up to Rs 10 lakh will be given during the period of moratorium on loans for students whose parental income is less than Rs.4.5 lakh per annum. The loans will be disbursed by scheduled banks under the Educational Loan Scheme of the Indian Banks' Association (IBA) for those pursuing courses in professional/technical streams from recognised institutions in the country. The modalities have been finalised in consultation with the IBA. The scheme is effective from the academic year 2009-10.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X