For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேஸ் விலை: சிலிண்டருக்கு ரூ.40 வரை குறைத்தது டெல்லி அரசு!!

By Shankar
Google Oneindia Tamil News

Gas Cylinder
டெல்லி: விற்பனை வரி குறைப்பு மூலம் சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ 40 வரை குறைத்துள்ளது டெல்லி அரசு.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு டீசல், மண்ணெண்ணெய், கேஸ் விலைகளை உயர்த்தியது. நாடு முழுவதும் எதிர்கட்சியினர் விலை உயர்வை கண்டித்து கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

விலையேற்றத்தை குறைக்க முடியாது என்றும் அதற்கு பதிலாக மாநில அரசுகள் விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கூறிவிட்டது. அதன்படி மேற்குவங்கம், கேரள மாநிலங்கள் விற்பனை வரியைக் குறைத்துள்ளன.

இப்போது ஷீலா தீக்ஷித் தலைமையிலான டெல்லி மாநில அரசும் விற்பனை வரியைக் குறைத்துள்ளது. குறிப்பாக சமையல் எரிவாயு மீதான வரியை கணிசமாகக் குறைத்துள்ளது.

இதனால் கேஸ் விலை 40 ரூபாய் வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு 37 பைசாவும் குறைந்துள்ளது.

மேலும் சில மாநிலங்களும் எரிபொருள்கள் மீதான விற்பனை வரியைக் குறைக்க உத்தேசித்து வருகின்றன.

English summary
The Delhi govt has cut taxes on fuels to give a relax to the Delhities from price burden. According to the press release, the price of gas reduced up to Rs 40 per cylinder through the tax cuts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X