For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூன் 30-ல் ஆரம்பம்!

By Shankar
Google Oneindia Tamil News

Medical Counselling
சென்னை: எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் வரும் ஜூன் 30-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இந்த கவுன்சிலிங் நடக்கிறது.

காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த கவுன்சிலிங் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது. ஜூன் 30-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு பிரிவினருக்கு தனித்தனியாக கவுன்சலிங் நடக்கிறது.

ஜூன் 30-ம் தேதி விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணவத்தினரின் பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீட்டுக்காக கவுன்சலிங் நடக்கிறது.

ஜுலை 1 ந் தேதி பொது கவுன்சிலிங் நடக்கிறது. இது பொதுப்பிரிவினருக்கானது. இதில் அதிக மார்க் எடுத்த அனைத்து சமூகதைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் கலந்து கொள்கின்றனர்.

ஜூலை 2 ந் தேதி பிற்பகல் 2 மணிக்கும், 4 ந் தேதி காலை 9 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு மட்டும் கவுன்சலிங் நடக்கும்.

ஜூலை 4 ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு முஸ்லிம்களுக்கும் நடத்தப்படுகிறது.

ஜூலை 5 ந் தேதி காலை 9 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் மிகப் பிற்பட்டோருக்கு கவுன்சலிங் நடைபெறுகிறது.

6 ந் தேதி காலை 9 மணிக்கு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கவுன்சிலிங் நடக்க உள்ளது. அன்று பிற்பகல் 2 மணிக்கு அருந்ததியினருக்கும், மலைவாழ் பழங்குடி மக்களுக்கும் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கவுன்சிலிங்குக்கு வரும் நேரம், கட் ஆப் மார்க் விவரம் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகள் கவுன்சிலிங்குக்கு அவர்களுக்கு குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக வந்துவிடவேண்டும். இதுகுறித்து விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தனிப்பட்ட கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்காவிட்டாலும் இணையதளத்தை பார்த்து கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளவேண்டும்.

பிளஸ் 2 தேர்வில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில் மார்க் மாற்றம் இருந்தால் அதற்கான சரியான சான்றுடன் மாணவர்கள் வரவேண்டும். கவுன்சிலிங்கின்போது இருக்கும் இடம்தான் கொடுக்கப்படும்.

முதல் கட்ட கவுன்சிலிங்கின்போது மாணவர்கள் வரவில்லையென்றால் 2 வது கட்ட கவுன்சிலிங்குக்கு வர அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The counselling for all medical studies in Tamil Nadu colleges will be scheduled on June 30th to July 6 for various categories of students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X