For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுற்றுச்சூழல் பள்ளிக்கு ரூ 50 கோடி நன்கொடை கொடுத்த நிலகேனி!

By Shankar
Google Oneindia Tamil News

Nandan Nilekheni
பெங்களூர்: இன்போஸிஸ் நிறுவனரும் ஒருங்கிணைந்த அடையாள அட்டை தயாரிப்புக் குழு தலைவருமான நந்தன் நிலகேனி மற்றும் அவர் மனைவி ரோஹிணி, சுற்றுச்சூழல் கல்வி நிறுவனத்துக்கு ரூ 50 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹியூமன் செட்டில்மெண்ட் (IIHS) நிறுவனத்தின் சுற்றுச் சூழல் பள்ளியின் வளர்ச்சிக்காக இந்தத் தொகையை அவர்கள் வழங்கியுள்ளனர்,.

இதுகுறித்து நிலகேனி மற்றும் ரோஹிணி விடுத்துள்ள கூட்டறிக்கையில், "கல்வி மற்றும் நகர்ப்புறமயமாக்கத்தில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹியூமன் செட்டில்மெண்ட் ஆற்றிவரும் பங்களிப்பு மகத்தானது. இப்படி ஒரு நிறுவனத்துக்கு எங்கள் நன்கொடை பயன்படுகிறது என்பதே எங்களுக்கு மிகுந்த மனக் கிளர்ச்சியைத் தருகிறது," என்று குறிப்பிட்டுள்ளனர்.

பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹியூமன் செட்டில்மெண்ட் கல்வி மையம் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய அமைப்பாகும். ஸெர்க்ஸெஸ் தேசாய், கோத்ரெஜ், சைரஸ் குஸ்டெர், ரெஹானா ஜாப்வாலா, விஜய் கேல்கர், கேஸுப் மஹிந்திரா, கிஷோர் மரிவாலா, ராஹுல் மெஹ்ரோத்ரா, பன்சி மேத்தா, ராகேஷ் மோகன், நந்தன் நிலகேனி, நாசர் முகர்ஜி, தீபக் பரேக், சிரிஷ் படேல் மற்றும் தீபக் ஸ்டால்வாக்கர் போன்ற முக்கிய பிரமுகர்கள் இணைந்து நடத்தும் நிறுவனம் இது.

பல்வேறு படிப்புகளுக்கான சிறப்புத் துறைகளை உருவாக்க, டிஜிட்டல் லைப்ரரிகளை அமைக்க ரூ 300 கோடி வரை நிதி திரட்டி வருகிறது இந்த கல்வி மையம். அதன் ஒரு பகுதியாகவே ரூ 50 கோடியை வழங்கியுள்ளார் நிலகேனி தம்பதியர்.

English summary
UID chairman and Infosys co-founder Nandan Nilekani and his wife Rohini have gifted Rs 50 crore to the Indian Institute for Human Settlements (IIHS) to fund the establishment of its school of environment and sustainability. Their gift is one of the largest for a new school at a prospective national university for urban studies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X