For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம. வேலுசாமி விடுதலை

By Siva
Google Oneindia Tamil News

கோவை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செ.ம. வேலுசாமி. கடந்த 2008-ம் ஆண்டு இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 53 லட்சத்து 57 ஆயிரத்து 984-க்கு சொத்து சேர்த்ததாக செ.ம.வேலுசாமி மற்றும் அவருடைய மனைவி பானுமதி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும், மேலும் அவர் மீது வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி வாங்கவில்லை என்றும் கூறி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி சீனிவாசன் உத்தரவிட்டார்.

English summary
Former ADMK minister SM Velusamy has been freed from the asset case. Anti-corruption police have filed an asset case against him in 2008 but the judge has freed him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X