For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 பைசா, டீசல் 15 பைசா அதிகரிப்பு-மக்கள் பெரும் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

Petrol Station
டெல்லி: ஏற்கனவே டீசல், காஸ் விலை உயர்த்தப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், லாரி உரி்மையாளர்கள் ஸ்டிரைக்கில் குதிக்கத் தயாராகி வரும் நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி விட்டது அரசு.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 27 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 15 பைசாவும் உயர்த்தியுள்ளது அரசு. இன்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வருகிறதாம். பெட்ரோல் பங்க் டீலர்களின் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி வேண்டியதாகப் போய் விட்டதாக அரசு காரணம் கூறியுள்ளது.

பெட்ரோல் பங்க்குளுக்கு, பெட்ரோலுக்காக தரப்படும் டீலர் கமிஷன் தொகையை கிலோ லிட்டருக்கு ரூ. 1218 என்பதிலிருந்து ரூ. 1499 ஆக உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல டீசலுக்கான டீலர் கமிஷன் தொகையை ரூ. 747 என்பதிலிருந்து ரூ. 912 ஆக உயர்த்த அரசு அனுமதித்துள்ளது. இதையடுத்து தற்போது பெட்ரோல், டீசல் விலையில் கையை வைத்து மக்கள் தலையில் கையை வைக்க வைத்து விட்டனர்.

சில தினங்களுக்கு முன்புதான் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியது அரசு. இந்த நிலையில் மீண்டும் டீசல் விலையை உயர்த்தியுள்ளதால் லாரிகள் ஸ்டிரைக் நிச்சயம் நடக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் எழுந்துள்ளது.

English summary
The government today hiked petrol and diesel prices by a marginal Rs. 0.27 a litre and Rs. 0.15 per litre, respectively following increase in the commission paid to petrol pump dealers. The government approved raising dealer's commission paid on petrol from Rs. 1,218 per kilolitre to Rs. 1,499 per kl, resulting in a Rs. 0.27 per litre increase in retail price with effect from midnight tonight, an official said. Similarly, the dealers' commission on diesel was hiked from Rs. 757 per kl to Rs. 912 per kl, resulting in a Rs. 0.15 per litre increase in rates at retail level.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X